/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
40 அடி கிணற்றில் விழுந்த கன்று குட்டி: உயிருடன் மீட்பு
/
40 அடி கிணற்றில் விழுந்த கன்று குட்டி: உயிருடன் மீட்பு
40 அடி கிணற்றில் விழுந்த கன்று குட்டி: உயிருடன் மீட்பு
40 அடி கிணற்றில் விழுந்த கன்று குட்டி: உயிருடன் மீட்பு
ADDED : மே 23, 2024 04:58 AM

கூடலுார்: கூடலுார் அருகே, 40 அடி கிணற்றில் விழுந்த கன்று குட்டியை, தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.
கூடலுார் மார்தோமா நகர் அருகே, சர்மிளா என்பவருக்கு சொந்தமான, கன்றுகுட்டி, 40 அடி கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடியது.
தீயணைப்பு நிலை அலுவலர் மார்ட்டின் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அந்த பகுதிக்கு சென்று, ஒரு மணி நேரம் போராடி கன்றுகுட்டியை உயிருடன் மீட்டனர்.
தீயணைப்பு துறையினர் கூறுகையில், 'கிணற்றை சுற்றி, போதுமான பாதுகாப்பு தடுப்புகள் இல்லாததால், கன்று குட்டி அதனுள் விழுந்துள்ளது. மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க, கிணற்றை சுற்றி பாதுகாப்பு தடுப்புகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.