/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெண் டாக்டர் மீது குற்றச்சாட்டு; ஆய்வுக்கு பின் உடனடி 'டிரான்ஸ்பர்'
/
பெண் டாக்டர் மீது குற்றச்சாட்டு; ஆய்வுக்கு பின் உடனடி 'டிரான்ஸ்பர்'
பெண் டாக்டர் மீது குற்றச்சாட்டு; ஆய்வுக்கு பின் உடனடி 'டிரான்ஸ்பர்'
பெண் டாக்டர் மீது குற்றச்சாட்டு; ஆய்வுக்கு பின் உடனடி 'டிரான்ஸ்பர்'
ADDED : ஏப் 23, 2024 10:16 PM
ஊட்டி : மஞ்சூரில் குற்றச்சாட்டுக்கு ஆளான பெண் டாக்டர் 'டிரான்ஸ்பர்' செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அரசு மருத்துவமனை டாக்டர் ரஞ்சனி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதன் அடிப்படையில் வந்த புகாரின் பேரில், மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் பரமேஸ்வரி, மஞ்சூர் அரசு மருத்துவமனையில் நேரில் ஆய்வு செய்தார்.
மேலும், டாக்டர் ரஞ்சனி தங்கியுள்ள அரசு மருத்துவ குடியிருப்பிலும் ஆய்வு செய்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அவருடன் ஊட்டி ஆர்.டி.ஓ., மகராஜ் உட்பட வருவாய் துறையினர் இருந்தனர்.
அங்கு, சுகாதார பணிகள் இணை இயக்குனர் பரமேஸ்வரியிடம், மக்கள் கூறியதாவது:
மஞ்சூர் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் பல்வேறு அவசர தேவைகளுக்காக இங்கு வந்தால், பெரும்பாலும் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்து விடுகிறார். இங்கு எந்த சிகிச்சையும் அளிப்பதில்லை.
சிகிச்சை அளிப்பதற்கு முன்னர் பரிசோதனை செய்ய நோயாளியை கையால் தொட மாட்டார், நோயாளியை பேனா மூலம் தொட்டுப் பார்ப்பார்.
மருந்து, மாத்திரைகளை தனியாரிடம் வாங்க சொல்கிறார். இரவு, 8:00 மணிக்கு மேல் வரக்கூடாது என்கிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சுகாதார பணிகள் இனை இயக்குனர் பரமேஸ்வரி கூறுகையில், ''அரசு கொடுத்த கம்யூட்டர், பிரிண்டர், நாற்காலி உள்ளிட்ட பொருட்களை சொந்த பயன்பாட்டுக்காக, அரசு குடியிருப்பில் வைத்து பயன்படுத்தியுள்ளார்.
மருத்துவமனை பராமரிப்பு, பழுது பார்ப்பு பணிகளுக்கு அரசு மூலம் ஒதுக்கப்பட்ட நிதியை சொந்த கணக்கில் பயன்படுத்தியுள்ளார்.
எனது அனுமதி இல்லாமல், 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்து மாத்திரைகளை எடக்காடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். விளக்கம் கேட்டு டாக்டருக்கு 'நோட்டீஸ்' அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும், புகாரின் அடிப்படையில், அவர், பந்தலுார் அரசு மருத்துவமனைக்கு 'டிரான்ஸ்பர்' செய்யப்பட்டுள்ளார்,'' என்றார்.

