/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மனித --விலங்கு மோதலை தடுக்க நடவடிக்கை வன அதிகாரிகள் கூட்டத்தில் தீர்மானம் மூன்று மாநில வன அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு

ADDED : மார் 28, 2024 04:58 AM

கூடலுார் : முதுமலையில் நடந்த கூட்டத்தில், மனித-விலங்கு மோதலை தடுக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,' என, மூன்று மாநில வன அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
முதுமலை தெப்பக்காடு மேம்பட்ட வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில், தேசிய புலிகள் காப்பகம் சார்பில், முதுமலை புலிகள் காப்பகம்; நீலகிரி மற்றும் கூடலுார் வனக்கோட்டம்; சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்; கர்நாடகா பந்திப்பூர் மற்றும் நாகரஹோலே புலிகள் காப்பகம்; கேரளா முத்தங்கா வன சரணாலய வன அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு, தேசிய புலிகள் காப்பக தென்மண்டல ஐ.ஜி., முரளி தலைமை வகித்தார். தமிழக முதன்மை - தலைமை வன பாதுகாவலர் (புலிகள் காப்பகம்) ராகேஷ் குமார் டோக்கரா, தேசிய புலிகள் காப்பக ஏ.ஐ.ஜி., ஹரணி ஆகியோர், மனித-வன விலங்கு மோதல்; வன குற்றங்கள் தடுப்பு பாதுகாப்பு குறித்து பேசினர். நீலகிரி வனச் சூழல் குறித்து, முதுமலை கள இயக்குனர் வெங்கடேஷ் விளக்கினார்.
தொடர்ந்து, நடந்த கூட்டத்தில், 'மூன்று மாநில எல்லைகளில் மனித- வன விலங்கு மோதலை தடுப்பது; வனக்குற்றங்கள் தடுப்பதிலும், குற்றவாளிகள் குறித்து விபரங்களை பரிமாறி கொள்வது; மக்களை அச்சுறுத்தும் காட்டு யானைகள் குறித்த விபரங்களை பரிமாறி கொள்வது; குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் காட்டு யானையை பிடித்து வனப்பகுதியில் விட்ட பின், அதன் செயல்பாடு, நடமாட்டம் குறித்து விவரங்களை பரிமாறி கொள்வது; மூன்று மதத்திற்கு ஒரு முறை, மூன்று மாநில வனத்துறை அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை கூட்டம் நடத்தி, தகவல்களை பரிமாறிக் கொண்டு தீர்வு காண்பது,' என, தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில், சத்தியமங்கலம் கள இயக்குனர் ராஜ்குமார், கர்நாடகா பந்திப்பூர் கள இயக்குனர் பிரபாகரன், கேரளா வடக்கு மண்டல தலைமை வன பாதுகாவலர் தீபா, முதுமலை துணை இயக்குனர்கள் வித்யா, அருண்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.