/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாரியம்மன் கோவில் தேர்திருவிழா கோலாகலம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
/
மாரியம்மன் கோவில் தேர்திருவிழா கோலாகலம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
மாரியம்மன் கோவில் தேர்திருவிழா கோலாகலம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
மாரியம்மன் கோவில் தேர்திருவிழா கோலாகலம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : ஏப் 16, 2024 11:49 PM

ஊட்டி;ஊட்டி மாரியம்மன் கோவிலில் தேர்திருவிழா கோலாகலமாக நடந்தது.
ஊட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஏப்., மாதம் தேர்திருவிழா நடக்கிறது. நடப்பாண்டு விழா மார்ச், 15ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. 19ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, தேர் முகூர்த்தக்கால் நடுதல், தேர் கலசம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.
தேர்திருவிழாவை ஒட்டி கடந்த ஒரு மாதமாக பல்வேறு சமூகத்தினரின் உபயதாரர்கள் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. நேற்று, தேர்திருவிழா நிகழ்ச்சி நடந்தது.
மதியம், 1:50 மணிக்கு கோவில் வளாகத்திலிருந்து புறப்பட்ட தேர் பவனியை கோவில் நிர்வாகத்தினர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன், தேர் பவனி, ஆடல், பாடலுடன் காபி ஹவுஸ் சந்திப்பு, லோயர் பஜார், பஸ் ஸ்டாண்ட், மெயின் பஜார் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
வழி நெடுக பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டனர். தேர்திருவிழாவை ஒட்டி காலை முதல் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் பூஜை செய்தனர்.
இன்று, 17ம் தேதி மஞ்சள் நீராட்டு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. 19ம் தேதி விடையாற்றி, உற்சவம் உள்பிரகாரத்தில் அம்மன் புறப்பாடு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

