/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
150 பேர் பயணிக்கும் அரசு டவுன் பஸ் ஒரே பஸ் என்பதால் அள்ளும் கூட்டம்
/
150 பேர் பயணிக்கும் அரசு டவுன் பஸ் ஒரே பஸ் என்பதால் அள்ளும் கூட்டம்
150 பேர் பயணிக்கும் அரசு டவுன் பஸ் ஒரே பஸ் என்பதால் அள்ளும் கூட்டம்
150 பேர் பயணிக்கும் அரசு டவுன் பஸ் ஒரே பஸ் என்பதால் அள்ளும் கூட்டம்
ADDED : ஆக 27, 2024 01:20 AM
அன்னுார்;அன்னுாரில் இருந்து பீளமேடு வழியாக, இயங்கும் அரசு டவுன் பஸ்ஸில், 150 பயணிகள் வரை பயணிக்கின்றனர்.
காளப்பட்டி, பீளமேடு மற்றும் அவிநாசி ரோடு பகுதியில் உள்ள பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் அன்னுார் பகுதியை சேர்ந்த பல நூறு மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
பெரும்பாலான மாணவர்கள் அன்னுாரில் இருந்து காந்திபுரம் சென்று அங்கிருந்து மற்றொரு டவுன் பஸ் மூலம் பீளமேடு மற்றும் அவிநாசி ரோடு பகுதியில் உள்ள கல்லூரிக்கு செல்கின்றனர். காளப்பட்டி செல்வோர் சரவணம்பட்டி சென்று மற்றொரு பஸ் மாறி காளப்பட்டி செல்கின்றனர்.
அன்னுாரில் இருந்து தினமும் காலை 7:00 மணிக்கு சி 45 என்கிற அரசு டவுன் பஸ் கோவில்பாளையம், குரும்பபாளையம், காளப்பட்டி, நேரு நகர், பீளமேடு வழியாக காந்திபுரம் செல்கிறது. இந்த பஸ்ஸில் சென்றால், காளப்பட்டி மற்றும் பீளமேடு பகுதி கல்லூரிக்கு ஒரே பஸ்ஸில் சென்று சேர முடியும் என்பதால், மாணவ, மாணவிகள் கூட்டம் அள்ளுகிறது. 150 பேர் வரை ஒரே சமயத்தில் பயணிக்கின்றனர். படிகளில் தொங்கி அபாய பயணம் செய்கின்றனர்.
இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், 'காலை 6.45 அல்லது 7:15 மணிக்கு மற்றொரு அரசு டவுன் பஸ் அன்னுாரில் இருந்து காளப்பட்டி வழியாக பீளமேடுக்கு இயக்க வேண்டும் என்று அன்னுாரில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக கிளையில் மனு கொடுத்துள்ளோம். கோவை கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்துள்ளோம்.
மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, கல்லூரி மாணவ, மாணவியருக்கு உதவ வேண்டும்,' என்றனர்.

