/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் 796 முதியோர் தபால் வாக்களிக்க விருப்பம்
/
நீலகிரியில் 796 முதியோர் தபால் வாக்களிக்க விருப்பம்
நீலகிரியில் 796 முதியோர் தபால் வாக்களிக்க விருப்பம்
நீலகிரியில் 796 முதியோர் தபால் வாக்களிக்க விருப்பம்
ADDED : ஏப் 07, 2024 10:39 PM
ஊட்டி;நீலகிரி லோக்சபா தொகுதியில், மூன்று சட்டசபை தொகுதிகளில், 85 வயதிற்கு மேற்பட்ட, 796 முதியோர்களும், 981 மாற்றுத்திறனாளிகளும் தபால் வாயிலாக வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, 'ஊட்டி சட்ட சபை தொகுதியில், 12 குழுக்கள்; குன்னுார் சட்டசபை தொகுதியில், 8 குழுக்கள் மற்றும் கூடலுார் சட்டசபை தொகுதியில், 9 குழுக்கள்,' என, மொத்தம், 29 குழுக்கள், 12-டி படிவங்கள் கொடுத்து, விருப்ப மனுக்களை பெற்றுள்ளனர்.
ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கெந்தொரை, பகுதியில், 85 வயதை கடந்த முதியோர் அளித்த தபால் ஓட்டு மற்றும் தலைக்குந்தா பகுதி யில், இரண்டு மாற்றுத்திறனாளிகள் அளித்த ஓட்டு பதிவினையும் ஆய்வு செய்த, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நேரில் பார்வையிட்டனர்.