/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி லோக்சபா தொகுதியில் 16 வேட்பாளர்கள் போட்டி
/
நீலகிரி லோக்சபா தொகுதியில் 16 வேட்பாளர்கள் போட்டி
ADDED : மார் 31, 2024 01:13 AM
ஊட்டி';நீலகிரி லோக்சபா தொகுதியில், ஊட்டி, குன்னூர், கூடலூர், பவானிசாகர், மேட்டுப்பாளையம் மற்றும் அவிநாசி ஆகிய, சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளன. இந்த, 6 சட்டசபை தொகுதிகளில் 14 லட்சத்து, 18 ஆயிரத்து, 914 வாக்காளர்கள் உள்ளனர்.
ஏப்., 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. மார்ச், 20ல் வேட்பு மனு துவங்கிய நிலையில், 33 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 28ம் தேதி, வேட்பு மனு பரிசீலனையில், 17 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளான நேற்று, யாரும் வாபஸ் பெறவில்லை. பா.ஜ., வேட்பாளர் முருகன், தி.மு.க.,வில் எம்.பி., ராஜா, அ.தி.மு.க.,வில் லோகேஷ் தமிழ்செல்வன், நாம் தமிழர் கட்சியில் ஜெயகுமார் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என, 16 பேர் களத்தில் உள்ளனர்.

