/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மூன்று தொகுதியில் 10 இயந்திரங்கள் மக்கர்: தாமதமாக துவங்கிய ஓட்டுப்பதிவு

ADDED : ஏப் 20, 2024 12:31 AM

ஊட்டி;மின்னணு இயந்திரங்கள் பழுதால், 10 ஓட்டு சாவடிகளில் தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது.
நீலகிரி லோக்சபா தொகுதியில் ஓட்டு சாவடிகளுக்கு தேவையான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஏற்கனவே போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த ஓட்டுசாவடி மையங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தன.
இந்நிலையில், நேற்று காலை ஓட்டுப்பதிவு தயாரான போது, 10 இடங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதானது. இதனால், மாற்று ஏற்பாடாக ரிசர்வில் தயாராக வைத்திருந்த இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு ஓட்டுப்பதிவு தொடங்கியது.
இதன்படி, ஊட்டி அடுத்த மஞ்சூர் அருகில் உள்ள கரியமலை ஓட்டு சாவடியில் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்கு பதிவு தொடங்கியது. ஊட்டி பிங்கர் போஸ்ட் நிர்மலா பள்ளி, தேவாலா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட உப்பட்டி பாரத் மாதா பள்ளியில் அரைமணி நேரம் தாமதமாக ஓட்டு பதிவு தொடங்கியது. பைகமந்து ஓட்டுசாவடியில் பேட்டரி பிரச்னையில், 89 ஓட்டுக்கள் பதிவான நிலையில் திடீரென பழுதானது. பின், மண்டல அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பேட்டரி மாற்றப்பட்டு இயந்திரம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. மூன்று தொகுதிகளில் 10 இயந்திரங்கள் மக்கராகி தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது.