/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இறைச்சி கழிவை கொட்டஇடம் ஒதுக்க வலியுறுத்தல்
/
இறைச்சி கழிவை கொட்டஇடம் ஒதுக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 08, 2025 02:09 AM
இறைச்சி கழிவை கொட்டஇடம் ஒதுக்க வலியுறுத்தல்
ஈரோடு:ஈரோடு மே-5 அனைத்து வியாபாரிகள் நலச்சங்க மாவட்ட தலைவர் ஜோசப் தலைமையில், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், மனு வழங்கி கூறியதாவது:
பெருந்துறை அருகே விஜயபுரி, மூங்கில்பாளையம் பஞ்.,களில் மீன், கோழி, ஆடு கடை வைத்து வியாபாரம் செய்கிறோம். கடந்த, 2022ல் கழிவுகளை நாங்களே பராமரித்து கொள்ள கூறினர். பின், 2023 ஜன., 2 முதல் கடைகளை திறக்க கூடாதென நோட்டீஸ் வழங்கி, கடைகள் அடைக்கப்பட்டன. கலெக்டரிடம் வழங்கிய மனுவின் அடிப்படையில் மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன. இறைச்சி கழிவுகளை அப்புறப்படுத்த இடவசதி கேட்டு, பஞ்., நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திடம் மனு வழங்கியும் இதுவரை இடம் ஒதுக்கவில்லை. வருவாய் துறை சார்பில் எங்களுக்கு உரிய இடம் ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

