/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கிணற்றுக்கு தடுப்பு வேலி அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்
/
கிணற்றுக்கு தடுப்பு வேலி அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்
கிணற்றுக்கு தடுப்பு வேலி அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்
கிணற்றுக்கு தடுப்பு வேலி அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்
ADDED : ஜூலை 25, 2025 01:32 AM
வெண்ணந்துார், வெண்ணந்துார் டவுன் பஞ்., 5 வது வார்டு பகுதியில் இருந்து, நாச்சிப்பட்டி செல்லும் சாலையில் ஏரிமேடு பகுதியில் சாலை ஓரத்தில் திறந்த நிலையில் அபாய கிணறு இருந்தது. நாச்சிப்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு மாணவ, மாணவியர் சைக்கிளில் சென்று வருகின்றனர். மேலும் காலை, மாலை நேரங்களில் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்து வருகிறது.
ஏரிமேடு பகுதியில் கிணற்றுக்கு தடுப்புச் சுவர் இல்லாததால் தவறிவிழ வாய்ப்பு இருப்பதால், தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, டவுன் பஞ்., சார்பாக உடனடியாக தடுப்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது ஏரிக்கரை சாலையோர கிணறுக்கு, தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.