/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்டம் முழுதும் 21 நாட்களில் 1,521.30 மி.மீ., மழைப்பொழிவு
/
மாவட்டம் முழுதும் 21 நாட்களில் 1,521.30 மி.மீ., மழைப்பொழிவு
மாவட்டம் முழுதும் 21 நாட்களில் 1,521.30 மி.மீ., மழைப்பொழிவு
மாவட்டம் முழுதும் 21 நாட்களில் 1,521.30 மி.மீ., மழைப்பொழிவு
ADDED : மே 23, 2024 07:05 AM
நாமக்கல் : மாவட்டம் முழுதும், 21 நாட்களில், 1,521.30 மி.மீ., மழை பெய்துள்ளது. தொடர் மழை காரணமாக, பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகம் முழுதும், சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ராசிபுரம், புதுச்சத்திரம், மோகனுார், எருமப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மழை பெய்துள்ளது.
கடந்த, 20 இரவில், நாமக்கல் மாவட்டம் முழுதும், 812 மி.மீ., மழை பெய்தது. அதிகபட்சமாக புதுச்சத்திரத்தில், 157.40, நாமக்கல்லில், 115.20, சேந்தமங்கலம், 105, ராசிபுரத்தில், 103 மி.மீ., மழை பதிவானது. அதில், ராசிபுரம் அணைப்பாளையம் பகுதியில் மழைநீர் குடியிருப்புக்குள் புகுந்தது. அவர்கள் அங்குள்ள கோவிலில் தஞ்சமடைந்தனர். அவர்களுக்கு, வருவாய் துறை மூலம் குடிநீர், உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், சுற்றுலாத்தலமான கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்ம அருவி, புளியஞ்சோலை அருவிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று பார்ப்பதும், ஆனந்த குளியல்போட்டு குதுாகலிப்பதும் வழக்கம். தற்போது தொடர் மழை காரணமாக, அருவிகளில் அதிகளவு தண்ணீர் கொட்டுகிறது.பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கடந்த, 20 முதல், இன்று வரை, சுற்றுலா பயணிகள் செல்லவும், குளிப்பதற்கும், மாவட்ட வனத்துறை தடை விதித்துள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம், 132.50 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று காலை, 6:00 மணி வரை பெய்த மழை அளவு (மி.மீ.,ரில்) பின்வருமாறு:எருமப்பட்டி, 30, மங்களபுரம், 20.60, மோகனுார், 21, நாமக்கல், 10, ப.வேலுார், 6.20, புதுச்சத்திரம், 17.10, ராசிபுரம், 8, சேந்தமங்கலம், 8, திருச்செங்கோடு, 5.60, கலெக்டர் அலுவலகம், 2, கொல்லிமலை, 4 என, மொத்தம், 132.50 மி.மீ., மழை பெய்துள்ளது.நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, 18 வரை, 510 மி.மீ., மழை பெய்திருந்தது. 19ல், 66.70, 21ல், 812.10, நேற்று முன்தினம், 132.50 என, இதுவரை, மொத்தம், 1,521.30 மி.மீ., மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

