/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வழித்தடம் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி போராட்டம்
/
வழித்தடம் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி போராட்டம்
ADDED : அக் 03, 2024 07:17 AM
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் யூனியன், சர்கார் மாமுண்டி பஞ்.,க்குட்பட்ட, காரக்குட்டிபாளையம் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு-கின்றனர். அவர்கள், மூன்று தலைமுறையாக பயன்படுத்தி வந்த வழித்தடத்தை, கம்பிவேலி அமைத்து சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், சாலை குறுகலானதால் மாணவர்கள், பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று காந்திஜெ-யந்தியையொட்டி அப்பகுதியில் கிராம சபை கூட்டம் நடந்தது. அப்போது, அதிகாரிகள் அளவீ-டுசெய்து, ஆக்கிரமிப்பை அகற்றி முறையான வழித்தடம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவித்து காத்திருப்பு போராட்-டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற, பி.டி.ஓ., அருளப்பன், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, 'வரு-வாய்த்துறை அதிகாரிகள் மூலம் கூடிய விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து பிரச்-னைக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்-படும்' என தெரிவித்ததையடுத்து, மக்கள் கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

