/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.32.84 கோடியில் 723 விவசாயிகளுக்கு பட்டா: எம்.பி., ராஜேஸ்குமார் தகவல்
/
ரூ.32.84 கோடியில் 723 விவசாயிகளுக்கு பட்டா: எம்.பி., ராஜேஸ்குமார் தகவல்
ரூ.32.84 கோடியில் 723 விவசாயிகளுக்கு பட்டா: எம்.பி., ராஜேஸ்குமார் தகவல்
ரூ.32.84 கோடியில் 723 விவசாயிகளுக்கு பட்டா: எம்.பி., ராஜேஸ்குமார் தகவல்
ADDED : பிப் 28, 2024 07:42 AM
நாமகிரிப்பேட்டை : ''நாமகிரிப்பேட்டை யூனியனில், 723 விவசாயிகளுக்கு, 32.84 கோடி ரூபாய் மதிப்பில் பட்டா வழங்கப்படும்,'' என, எம்.பி., ராஜேஸ்குமார் தெரிவித்தார்.
தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், இன்று நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை யூனியன், நாரைக்கிணறு பகுதியில், 723 விவசாயிகளுக்கு பட்ட வழங்க உள்ளார். அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் உமா, முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். முன்னேற்பாடு பணிகளை, எம்.பி. ராஜேஸ்குமார் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது: மங்களபுரம், நாரைக்கிணறு, மத்துரூட்டு ஆகிய கிராமங்களில் வசித்து வரும் விவசாயிகளுக்கு, 75 ஆண்டுகளாக பட்டா வழங்கப்படாமல் இருந்தது. அவர்கள் பட்டா வழங்கக்கோரி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். பட்டா இல்லாததால், அரசின் சலுகைகளை பெற முடியாமல் இருந்தனர்.
இந்நிலையில், முதல்வர் உத்தரவுப்படி, மாவட்ட நிர்வாகம் சார்பில், தனி வட்டாட்சியர் பணியிடம் தோற்றுவிக்கப்பட்டு, பட்டா வழங்கும் பணி தொடங்கியது. விவசாயிகள் வழங்கிய மனுக்கள் அடிப்படையில், அதிகாரிகள் ஆய்வு செய்து முதற்கட்டமாக அமைச்சர் உதயநிதி, கடந்த, 2023ல், 139 விவசாயிகளுக்கு பட்டாவழங்கினார். மீதமுள்ள, 723 விவசாயிகளின் மனுக்களை ஆய்வு செய்து, 36 கோடி மதிப்புள்ள பட்டா தயாரிக்கப்பட்டு அமைச்சர் ராமச்சந்திரன், இன்று வழங்குகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர் உமா, முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி மற்றும் அப்பகுதி விவசாயிகள் உடனிருந்தனர்.

