/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
8 தாலுகாவில் ரேஷன் குறைதீர் முகாம்:95 மனுக்கள் மீது உடனடி தீர்வு
/
8 தாலுகாவில் ரேஷன் குறைதீர் முகாம்:95 மனுக்கள் மீது உடனடி தீர்வு
8 தாலுகாவில் ரேஷன் குறைதீர் முகாம்:95 மனுக்கள் மீது உடனடி தீர்வு
8 தாலுகாவில் ரேஷன் குறைதீர் முகாம்:95 மனுக்கள் மீது உடனடி தீர்வு
ADDED : மார் 10, 2024 02:12 AM
நாமக்கல்:மாவட்டத்தில் உள்ள, 8 தாலுகாவில் நடந்த ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாமில், 95 மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட்டது.
பொது வினியோக திட்டம் மூலம், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதிய ஸ்மார்ட் கார்டு கேட்டல், மொபைல் எண் பதிவு போன்ற சேவைகளை மேற்கொள்வதற்காக, ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம், மாதந்தோறும் நடத்தப்படுகிறது. மேலும், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி, பொது வினியோக திட்ட சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், ரேஷன் கார்டுகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், பொது வினியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.
அதன்படி, நேற்று, நாமக்கல், ராசிபுரம், மோகனுார், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, ப.வேலுார் மற்றும் குமாரபாளையம் ஆகிய, 8 தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில், ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடந்தது.நாமக்கல் வட்ட வழங்கல் அலுவலகத்தில், தாசில்தார் சின்னதம்பி தலைமையில் நடந்த முகாமில், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதிய ரேஷன் கார்டு என, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 22 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.கொல்லிமலை, 6, குமாரபாளையம், 4, மோகனுார், 11, ப.வேலுார், 10, சேந்தமங்கலம், 10, ராசிபுரம், 12, திருச்செங்கோடு, 20 என, மொத்தம், 95 மனுக்கள் வரப்பெற்றன. அனைத்துக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டது.

