/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ப.வேலுாரில் பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனத்தின் 11வது மாநில மாநாடு
/
ப.வேலுாரில் பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனத்தின் 11வது மாநில மாநாடு
ப.வேலுாரில் பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனத்தின் 11வது மாநில மாநாடு
ப.வேலுாரில் பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனத்தின் 11வது மாநில மாநாடு
ADDED : ஜூலை 27, 2025 12:41 AM
ப.வேலுார், ப.வேலுாரில் பாரதிய மின் தொழிலாளர் சார்பில், 11வது மாநில மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாநில பொதுச்செயலாளர் சரவணகுமார் கொடியேற்றி துவக்கி வைத்தார்.
மாநில தலைவர் பழனி தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் ரவீந்திரன், தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் ராஜாராம்பட் சங்க நிதிநிலை அறிக்கையை வாசித்தார். மாநில பொதுச்செயலாளர் சங்கர், ராஜமுருகன், பாஸ்கர், முத்துக்குமார், மாநில தலைவர் மணி, சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். வக்கீல் முரளிகிருஷ்ணன் சிறப்புரை நிகழ்த்தி சங்க தீர்மானங்களை நிறைவேற்றினார்.
அதில், நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்துவித பதவி உயர்வுகளையும், உடனடியாக வழங்க வேண்டும். ஊதிய உயர்வு பேச்சு வார்த்தைகளை நடத்தி, முத்தரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். மின்வாரிய ஓய்வூதியதாரர்களுக்கு, பென்ஷன் வழங்க வேண்டியும்; மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை நீக்க வேண்டும்; பெண் மின் கணக்கீட்டாளர்களை கல்வி தகுதிக்கேற்ப வேறு பிரிவுக்கு மாற்றம் செய்ய வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களில் உள்ளதுபோல், பதவி உயர்வு நடைமுறைப்படுத்த வேண்டும். காலியாக உள்ள, 25,000 களஉதவியாளர் பதவிக்கு கேங்மேன்களை அமர்த்த வேண்டும்; விபத்தில் சிக்கும் மின்சார ஊழியர்களின் மருத்துவ செலவுகளை மின் நிர்வாகமே ஏற்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நேற்று நடந்த பாரதிய தொழிலாளர் சம்மேளன மாநில மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 500க்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

