/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செவிலியர்கள் போராட்டம் இரண்டாவது நாளாக நீடிப்பு
/
செவிலியர்கள் போராட்டம் இரண்டாவது நாளாக நீடிப்பு
ADDED : டிச 22, 2025 08:30 AM

நாமக்கல்: நாமக்கல்லில், அனைத்து தொகுப்பூதிய செவி-லியர்களின் பணி புறக்கணிப்பு மற்றும் காத்தி-ருப்பு போராட்டம், இரண்டாம் நாளாக நேற்றும் நீடித்தது. நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் நடந்த இந்த போராட்டத்திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பா-ளர்கள் சத்தியா, சவுமியா, இலக்கியா ஆகியோர் தலைமை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர் சங்க மாநில துணைத்தலைவர் இளங்கோ, அனைத்து மருந்தா-ளுனர் சங்க நிர்வாகி சண்முகம் ஆகியோர் முன்-னிலை வகித்து கோரிக்கையை விளக்கி பேசினர்.
அதில், தி.மு.க., தேர்தல் கால வாக்குறுதியில் குறிப்பிட்டதுபோல், அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்-கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 'தங்களுடைய கோரிக்கைகள் நிறை-வேறும் வரை போராட்டம் தொடரும்' என, அவர்கள் தெரிவித்தனர்.

