/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிளாஸ்டிக் குடோனில் வெடித்த மர்ம பொருள்
/
பிளாஸ்டிக் குடோனில் வெடித்த மர்ம பொருள்
ADDED : மார் 15, 2026 06:58 AM
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம்
அருகே, கணபதிபாளையம் பகுதியில் பழைய பிளாஸ்டிக் கழிவு குடோன்
செயல்பட்டு வருகிறது.
பல பகு-தியில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக்
கழிவுகளை இங்கு கொண்டு வந்து, மறு சூழற்சி செய்யப்படுகிறது. இந்த
பழைய பிளாஸ்டிக் கழிவு குடோனில், நேற்று காலை 10:00 மணிக்கு, அதே பகு-தியை
சேர்ந்த காளிஸ்வரி, 60, என்பவர் வேலை செய்து கொண்-டிருந்தார்.
அப்போது பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் ஒன்று வெடித்தது. சத்தம்
கேட்டு அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சிய-டைந்து ஓடிவந்தனர்.
அப்போது, மர்ம பொருள் வெடித்ததில் காளிஸ்வரிக்கு வலது கை மணிக்கட்டு
பகுதி முழுமையாக சிதைந்துவிட்டது.
மேலும், உடம்பு, கால்களில்
படுகாயம் ஏற்-பட்டது. அவரை மீட்டு பள்ளிப்பாளையம் அரசு
மருத்துவம-னையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு ஈரோடு தனியார்
மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பள்ளிப்பாளையம் போலீசார்
விசாரித்து வருகின்றனர்.

