/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தாய்மார்கள் பாலூட்டும் அறை உரிய பராமரிப்புக்கு அறிவுறுத்தல்
/
தாய்மார்கள் பாலூட்டும் அறை உரிய பராமரிப்புக்கு அறிவுறுத்தல்
தாய்மார்கள் பாலூட்டும் அறை உரிய பராமரிப்புக்கு அறிவுறுத்தல்
தாய்மார்கள் பாலூட்டும் அறை உரிய பராமரிப்புக்கு அறிவுறுத்தல்
ADDED : மார் 04, 2024 07:39 AM
தர்மபுரி :தர்மபுரி பஸ் ஸ்டாண்டில், நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. இதில், தர்மபுரி பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.
தொடர்ந்து, புறநகர் பஸ் ஸ்டாண்டில் நகராட்சி கட்டுப்பாட்டிலுள்ள, தாய்மார்கள் பாலுாட்டும் அறையை பார்வையிட்டார். அறை பராமரிப்பின்றி, சுகாதாரமற்ற முறையில், மின்சாரம், குடிநீர் வசதி இல்லாமல், அங்குள்ள கழிவறை துர்நாற்றம் வீசியது. மேலும், தாய்மார்கள் அமரும் இருக்கைகள் உடைந்து இருந்ததைக் கண்டு எம்.எல்.ஏ., அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, தர்மபுரி நகராட்சி ஆணையரை தொடர்பு கொண்டு பேசினார். அதில், பஸ் ஸ்டாண்டிலுள்ள தாய்மார்கள் பாலுாட்டும் அறையை சுத்தம் செய்து, முறையாக சுகாதாரமாக பராமரிக்க அறிவுறுத்தினார்.