/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வேளாண் அறிவியல் நிலையத்தில் 'கலப்பின மீன் வளர்ப்பு' பயிற்சி
/
வேளாண் அறிவியல் நிலையத்தில் 'கலப்பின மீன் வளர்ப்பு' பயிற்சி
வேளாண் அறிவியல் நிலையத்தில் 'கலப்பின மீன் வளர்ப்பு' பயிற்சி
வேளாண் அறிவியல் நிலையத்தில் 'கலப்பின மீன் வளர்ப்பு' பயிற்சி
ADDED : ஜூலை 24, 2025 01:37 AM
மோகனுார், 'இன்று, 'கலப்பின மீன் வளர்ப்பு' என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடக்கிறது' என, வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், இன்று காலை, 10:00 மணிக்கு, 'கலப்பின மீன் வளர்ப்பு' என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி நடக்கிறது. இப்பயிற்சியில், மீன் பண்ணைக்குட்டை அமைக்க இடம் தேர்வு, மண் மற்றும் நீர் பரிசோதனை, பண்ணைக்குட்டை அமைத்தல், இந்தியா பெருங்கெண்டை (கட்லா, ரோகு, மிருகாலா) மீன்குஞ்சு தேர்வு செய்தல், உணவு மற்றும் நோய் மேலாண் முறைகள் குறித்து விளக்கப்படும்.
மேலும், மாநில, மத்திய அரசின் மீன் வளர்ப்புக்குரிய மானிய திட்டங்கள் பற்றியும் விரிவாக விளக்கப்படும். இப்பயிற்சியில் கலந்துகொள்ளும், மீன்குட்டை வைத்திருக்கும், நாமக்கல் மாவட்ட விவசாய மீன் பண்ணையாளர்
களுக்கு, நடப்பாண்டிற்கான மீன் குஞ்சுகள் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும். இதில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள், நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நேரில் அணுகலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

