/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு சுகாதார பணியாளர்கள் 'சுறுசுறு'
/
மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு சுகாதார பணியாளர்கள் 'சுறுசுறு'
மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு சுகாதார பணியாளர்கள் 'சுறுசுறு'
மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு சுகாதார பணியாளர்கள் 'சுறுசுறு'
ADDED : டிச 29, 2024 01:09 AM
மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு
சுகாதார பணியாளர்கள் 'சுறுசுறு'
நாமகிரிப்பேட்டை, டிச. 29-
நாமகிரிப்பேட்டை பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன் பெய்த மழையால், ஆங்காங்கே குட்டைபோல் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், தற்போது கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. முக்கியமாக, நகர் பகுதிகளில் மாலை நேரத்தில் கொசுவால் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. இது குறித்து அந்தந்த பகுதி கவுன்சிலர்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.
இதனால், நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, 18 வார்டுகளில் உள்ள ஒவ்வொரு வீதியாக இ.ஓ., ஆறுமுகம், துாய்மை அலுவலர் லோகநாதன் தலைமையிலான பேரூராட்சி அலுவலர்கள், சோதனை செய்து வருகின்றனர். தண்ணீர் தொட்டிகளை ஆய்வு செய்து, அதில் கொசு புழுக்கள் உள்ளதா என கண்காணித்து, 'அபேட்' மருந்து ஊற்றி வருகின்றனர். கொசு புழுக்கள் உற்பத்தி ஆகும் இடங்களான பழைய டயர்கள், தேங்காய் மட்டைகள், உடைந்த அல்லது பயன்படுத்தப்படாத மண் பானைகளில் உள்ள தண்ணீரை கீழே ஊற்றினர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மழை நீரை தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும், டவுன் பஞ்சாயத்து வினியோகிக்கும் குடிநீரை நன்றாக காட்சி குடிக்க வேண்டும் என அறிவுரை கூறினர்.
மேலும், துாய்மை பணியாளர்களை குழுக்களாக பிரித்து, 18 வார்டுகளில் உள்ள சாக்கடை, தண்ணீர் டேங்க், கழிப்பிட கட்டடம், பள்ளி வளாகம் பொது இடங்கள் என அனைத்து பகுதிகளையும் துாய்மைப்படுத்தி ஒவ்வொரு வீதிதோறும் கொசு புகை மருந்து அடித்து வருகின்றனர்.

