/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலையோரம் குவிந்துள்ள குப்பையால் சீர்கேடு
/
சாலையோரம் குவிந்துள்ள குப்பையால் சீர்கேடு
ADDED : டிச 12, 2024 01:31 AM
நாமக்கல், டிச. 12-
நாமக்கல் - திருச்சி சாலை, எஸ்.கே., நகர் பிரிவு சாலை அருகே, பல்வேறு பகுதிகளில் சேகரிக்கும் குப்பையை, இங்கு கொண்டு வந்து கொட்டி குவிக்கின்றனர்.
இந்த இடம், இதற்கு முன் வகுரம்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்டதாக இருந்தது. தற்போது, நாமக்கல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இப்போதும் தொடர்ந்து அந்த இடத்தில் குப்பை கொட்டி குவிக்கின்றனர். மேலும், கோழிக்கழிவு, கால்நடை இறைச்சி கழிவுகள் உள்ளிட்டவை ஏராளமாக குவிக்கப்படுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
எனவே, குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பையை உடனடியாக அகற்றி,
சம்பந்தப்பட்ட இடத்தில் எச்சரிக்கை பலகை,
'சிசிடிவி' கேமரா பொருத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

