/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உழவர் நல ஆலோசகர் கலந்தாய்வு கூட்டம்
/
உழவர் நல ஆலோசகர் கலந்தாய்வு கூட்டம்
ADDED : டிச 25, 2024 07:44 AM
நாமக்கல்: நாமக்கல் உழவர் சந்தை யில், ஒழுங்குமுறை விற்பனை கூட உழவர் நல ஆலோசகர்கள் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
அதில், நாமக்கல், எருமப்பட்டி வட்டாரத்திலிருந்து, ஒவ்வொரு பஞ்.,க்கும், 2 உழவர் நல ஆலோசகர்கள் தேர்வு செய்யப்பட்டு, கிராமத்தில் விளையும் விளைபொருட்களை, விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உள்ள சேமிப்பு கிடங்குகள், குளிர்பதன கிடங்கு, பரிவர்த்தனை கூடம் மற்றும் உலர்களங்கள் ஆகிய வசதிகளை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. வேளாண்துறை அலுவலர்கள், உதவி அலுவலர்கள், ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

