ADDED : டிச 11, 2024 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
நாமக்கல், டிச. 11-
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி, இ.கம்யூ., சார்பில், நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அன்புமணி தலைமை வகித்தார். பொருளாளர் குழந்தான் முன்னிலை வகித்தார். அதில், உணவு பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலையில்லா திண்டாட்டத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.

