/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தீர்க்காத குடிநீர் பிரச்னை போராட்டம் நடத்த முடிவு
/
தீர்க்காத குடிநீர் பிரச்னை போராட்டம் நடத்த முடிவு
ADDED : நவ 26, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் யூனியன், ராமாபுரம் பஞ்., அண்ணமார் நகரில், கடந்த பல மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடத்தில் முறையிட்ட போது, '30 நாளில் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தனர்.
ஆனால், 45 நாட்களாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், வரும் டிச., 5ல் மல்லசமுத்திரம் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடத்துவது என, நேற்று முடிவு செய்துள்ளனர். தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஆதிநாராயணன், மாவட்ட துணைத்தலைவர் பூபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

