/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குமாரபாளையத்திற்கு முதல்வர் வருகை
/
குமாரபாளையத்திற்கு முதல்வர் வருகை
ADDED : நவ 27, 2025 02:31 AM
குமாரபாளையம், : குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜே.கே.கே.சுந்தரம்; இவர், தி.மு.க., தொடங்கியபோது, அண்ணாதுரை, கருணாநிதியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். தி.மு.க.,வின் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினராக இருந்த சுந்தரம், கடந்த, 2014ல் இறந்தார். இதையடுத்து, தி.மு.க.,வின் சொத்து பாதுகா
ப்புக்குழு உறுப்பினராக அவரது மகன் மாணிக்கம் தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில், சுந்தரத்தின் மனைவி ராஜம்மாள், வயது மூப்பு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். நேற்று, குமாரபாளையம் வந்த ஸ்டாலின், அவரை சந்தித்து நலம் விசாரித்தார். நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி, ராஜேஸ்குமார், கலெக்டர் துர்கா மூர்த்தி, நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

