/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பொய் பிரசாரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை: வக்கீல் சங்கம் புகார்
/
பொய் பிரசாரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை: வக்கீல் சங்கம் புகார்
பொய் பிரசாரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை: வக்கீல் சங்கம் புகார்
பொய் பிரசாரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை: வக்கீல் சங்கம் புகார்
ADDED : அக் 23, 2024 07:20 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, மேட்டுக்கடையில் நீதிமன்ற கட்டடம் கட்ட அரசு அனுமதி வழங்கியுள்ளதாக, பொய் பிரசாரம் செய்த நபர்கள் மீது நடவடிக்கை கோரி, வக்கீல்கள் சங்கத்தினர் போலீசில் புகாரளித்தனர். இதுகுறித்து, வக்கீல் சங்க தலைவர் சரவணராஜன் கூறியதாவது: குமாரபாளையம் நகரில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகளில், திருச்செங்கோடு ரோட்டில் உள்ள மேட்டுக்கடை என்ற இடத்தில், தமிழக அரசும், சென்னை உயர்நீதிமன்றமும், குமாரபாளையம் வட்டத்திற்கு நிரந்தர நீதிமன்ற கட்டடம் கட்ட அனுமதி வழங்கியதாக பொய்யாக குறிப்பிட்டு வைத்துள்ளனர்.
இதே வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள், நாளிதழ்களில் வைத்து வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி இடமானது மிகவும் தரம் குறைந்த இடம். இதனை அதிக விலைக்கு விற்க, நீதிபதிகளின் பெயரையும், வக்கீல் சங்க பெயரையும் தவறாக பயன்படுத்தி உள்ளனர். இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.