/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
௪வது தலைமுறையாக சுமை தாங்கி கல்லை வழிபடும் குடும்பத்தினர்
/
௪வது தலைமுறையாக சுமை தாங்கி கல்லை வழிபடும் குடும்பத்தினர்
௪வது தலைமுறையாக சுமை தாங்கி கல்லை வழிபடும் குடும்பத்தினர்
௪வது தலைமுறையாக சுமை தாங்கி கல்லை வழிபடும் குடும்பத்தினர்
ADDED : பிப் 19, 2024 12:48 PM
நாமகிரிப்பேட்டை: நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்த தண்ணீர்பந்தல்காட்டை சேர்ந்தவர் கருப்பண்ண சேர்வை. இவரது மனைவி கர்ப்பிணியாக இருந்தபோது, 1950ல் தைப்பூச நாளில் இறந்தார்.
அப்பகுதி மக்களின் வழக்கப்படி, கர்ப்பிணிகள் இறந்தால், சாலையோரம் சுமைதாங்கி கல் அமைப்பது வழக்கம். இதன்படி மனைவி நினைவாக, கும்பக்கொட்டாய் பகுதியில், அவர் சுமை தாங்கி கல் அமைத்தார். சாலையில் தலையில் சுமையுடன் செல்பவர்கள், தங்களது பாரத்தை இதன் மீது இறக்கி வைத்து, இளைப்பாறி செல்வதும் வழக்கம். இந்த சுமை தாங்கி கல்லை, கருப்பண்ண சேர்வை குடும்பத்தினர் தற்போதும், தைப்பூச நாளில் பூஜை செய்து வணங்கி வருகின்றனர். அத்துடன் நீர் மோர், அன்னதானம், பிரசாதமும் வழங்கி வருகின்றனர்.
தலைமுறை தலை
முறையாக, 74வது ஆண்டாக இந்த வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர். தற்போது கருப்பண்ணனின் நான்காவது தலைமுறையினர் வழிபட்டு
வருகின்றனர்.
இதுகுறித்து கருப்பண்ணன் குடும்பத்தை சேந்த ராஜா கூறியதாவது: கர்ப்பிணியாக இருந்த பாட்டி இறந்ததால், தாத்தா அமைத்த சுமைதாங்கி கல்லை, தொடர்ந்து வழிபட்டு வருகிறோம். தற்போது நான்காவது தலைமுறையாக இது தொடர்கிறது. இவ்வாறு கூறினார்.

