/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மார்ச் 1ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவக்கம் மாவட்டத்தில் தேர்வு பணியில் 1,666 பேர்
/
மார்ச் 1ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவக்கம் மாவட்டத்தில் தேர்வு பணியில் 1,666 பேர்
மார்ச் 1ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவக்கம் மாவட்டத்தில் தேர்வு பணியில் 1,666 பேர்
மார்ச் 1ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவக்கம் மாவட்டத்தில் தேர்வு பணியில் 1,666 பேர்
ADDED : பிப் 26, 2024 02:17 PM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், வரும் மார்ச், 1ல் துவங்கும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு பணியில், 1,666 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தமிழகத்தில், பள்ளிக்கல்வித்துறை மூலம் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு, வரும் மார்ச், 1ல் துவங்கி, 22 வரை நடக்கிறது. அதேபோல், பிளஸ் 1 பொதுத்தேர்வு, மார்ச், 4ல் துவங்கி, 25ல் முடிகிறது. நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என, மொத்தம், 197 பள்ளிகளை சேர்ந்த, 8,479 மாணவர்கள், 8,932 மாணவியர் என, மொத்தம், 17,411 பேர் தேர்வு எழுதுகின்றனர். மேலும், பிளஸ் 1 தேர்வில், 9,151 மாணவர்கள், 9,304 மாணவியர் என, மொத்தம், 18,455 பேர் பங்கேற்கின்றனர். அவர்களுக்காக, 86 தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுக்காக, நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், ராசிபுரம் சிவானந்தாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என, மூன்று மையங்களில், கட்டு காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இத்தேர்வுக்காக, பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், தேர்வு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், முதன்மை கண்காணிப்பாளர்கள், 86 பேர், உதவி கண்காணிப்பாளர்கள், 86 பேர், துறை அலுவலர்கள், 90 பேர், அறை கண்காணிப்பாளர்கள், 1,200 பேர், வழித்தட அலுவலர்கள், 24 பேர், பறக்கும்படை அலுவலர்கள், 180 பேர் என, மொத்தம், 1,666 பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும், கலெக்டர் தலைமையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர்கள் பாலசுப்ரமணி, கணேசன், ரவிசெல்வம் உள்ளிட்டோரும், தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

