/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பி.ஜி.பி., வேளாண் கல்லுாரியில் மூன்றாவது பட்டமளிப்பு விழா
/
பி.ஜி.பி., வேளாண் கல்லுாரியில் மூன்றாவது பட்டமளிப்பு விழா
பி.ஜி.பி., வேளாண் கல்லுாரியில் மூன்றாவது பட்டமளிப்பு விழா
பி.ஜி.பி., வேளாண் கல்லுாரியில் மூன்றாவது பட்டமளிப்பு விழா
ADDED : ஏப் 17, 2024 12:49 PM
நாமக்கல்: நாமக்கல், பி.ஜி.பி., வேளாண் அறிவியல் கல்லுாரியின், மூன்றாவது பட்டமளிப்பு விழா நடந்தது. தாளாளர் கணபதி வரவேற்றார். தலைவர் பழனி ஜி பெரியசாமி தலைமை வகித்து, வேளாண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
வேளாண்மை உற்பத்தி ஆணையரும், முதன்மை செயலருமான அபூர்வா, ஐ.ஏ.எஸ்., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர், வேளாண் பட்டதாரிகளுக்கு விருது, பட்டங்களை வழங்கினார். பி.ஜி.பி., வேளாண் அறிவியல் கல்லுாரி முதல்வர் கோபால் நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சி, பட்டதாரிகளின் சாதனைகளை கொண்டாடியதுடன், அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு உத்வேகம் அளித்தது.
பி.ஜி.பி., வேளாண் அறிவியல் கல்லுாரி முதல்வர் கோபால், 'இந்த நிகழ்ச்சி, பட்டதாரிகளை ஊக்குவித்ததுடன், சாதனைகளை கவுரவிக்கும் விதமாக இருந்தது' என பாராட்டினார். மாணவர் கணேஷூக்கு, சிறந்த மாணவருக்கான எம்.எஸ்.சுவாமிநாதன் விருதும், மாணவி கோகுலபிரியாவுக்கு, சிறந்த மாணவிக்கான டாக்டர் பழனி ஜி பெரியசாமி விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

