/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அறுந்து விழுந்த நாமக்கல் பசுமை பந்தல்
/
அறுந்து விழுந்த நாமக்கல் பசுமை பந்தல்
ADDED : மே 17, 2024 02:26 AM
நாமக்கல்: வாகன ஓட்டிகளின் வசதிக்காக, நாமக்கல் நகராட்சி சார்பில், அமைக்கப்பட்ட பசுமை பந்தல் அறுந்து விழுந்தது.
நாமக்கல்லில், கோடை வெப்பத்தால் மக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். மேலும் போக்குவரத்து சிக்னலில், பல நிமிடங்கள் காத்திருக்கும் வாகன ஓட்டிகள், கொளுத்தும் வெப்பத்தால் அவதிக்கு ஆளாகினர். அதை தவிர்க்கும் வகையில் முதற்கட்டமாக, திருச்செங்கோடு சாலை, சேலம் சாலை, கோட்டை சாலை, மோகனுார் சாலை, துறையூர் சாலை, நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே ஆகிய போக்குவரத்து சிக்னல் பகுதிகளில், நகராட்சி சார்பில், பசுமை நிழல் பந்தல் அமைக்க முடிவு செய்யப்பட்டு கடந்த, 7ல் பசுமை பந்தல் அமைக்கப்பட்டது.
சிக்னலில் போது, வாகன ஓட்டிகள் அதன் நிழலில் காத்திருந்து சென்றனர். இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் அருகே, நெஞ்சாலைத்துறை அலுவலகம் எதிரிலுள்ள சிக்னலில், அமைக்கப்பட்ட பந்தல் நேற்று காலை அறுந்து விழுந்தது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். அறுந்து தொங்கிக்கொண்டிருந்த பச்சை வலைத்
துணியை, சிலர் சாலையோர பந்தலில் இழுத்து கட்டி சென்றனர்.

