/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.2.50 கோடிக்கு மாடுகள் விற்பனை
/
ரூ.2.50 கோடிக்கு மாடுகள் விற்பனை
ADDED : மார் 27, 2024 08:06 AM
சேந்தமங்கலம், : ரம்ஜான் பண்டிகையையெட்டி, புதன் சந்தையில் நேற்று நடந்த மாட்டுச்சந்தையில் விற்பனை அதிகரித்து, 2.50 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்தது.
சேந்தமங்கலம் அருகே, புதன்சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை மாட்டுச்சந்தை கூடுகிறது. இந்த சந்தைக்கு ராசிபுரம், தொட்டியம், புதுச்சத்திரம், பெரியமணலி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் வளர்க்கும் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதேபோல், இங்கிருந்து இறைச்சிக்காக கேரளாவிற்கு மாடுகள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், வரும், 29ல் ராம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், இறைச்சிக்காக மாடுகளை வாங்க ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால், நேற்று மாடுகள் விலை கிடுகிடுவென உயர்ந்து, 2.50 கோடி ரூபாய்க்கு விற்பனையானதாக, சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

