/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பங்குனி உத்திர திருவிழா முருக பக்தர்கள் பாதயாத்திரை
/
பங்குனி உத்திர திருவிழா முருக பக்தர்கள் பாதயாத்திரை
பங்குனி உத்திர திருவிழா முருக பக்தர்கள் பாதயாத்திரை
பங்குனி உத்திர திருவிழா முருக பக்தர்கள் பாதயாத்திரை
ADDED : மார் 24, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம், பங்குனி உத்திர திருவிழா, நாளை கொண்டாடப்படுவதையொட்டி, குமாரபாளையம் அருகே, தட்டான்குட்டை ஊராட்சி, நல்லாம்பாளையம், வீரப்பம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த, 250க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆண்டுதோறும் காவடி எடுத்து, பழநிக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம்.
அதன்படி, நேற்று முன்தினம், காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடம், காவடிகள் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, விநாயகர், முருகப்பெருமான் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் செய்தனர். பின், பொதுமக்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.