/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
லோக்சபா தேர்தலில் ஓட்டுப்போட வாக்காளர் எடுத்துச்செல்ல வேண்டிய ஆவணங்கள் விபரம்
/
லோக்சபா தேர்தலில் ஓட்டுப்போட வாக்காளர் எடுத்துச்செல்ல வேண்டிய ஆவணங்கள் விபரம்
லோக்சபா தேர்தலில் ஓட்டுப்போட வாக்காளர் எடுத்துச்செல்ல வேண்டிய ஆவணங்கள் விபரம்
லோக்சபா தேர்தலில் ஓட்டுப்போட வாக்காளர் எடுத்துச்செல்ல வேண்டிய ஆவணங்கள் விபரம்
ADDED : ஏப் 08, 2024 02:45 AM
நாமக்கல்;'தேர்தலில் ஓட்டுப்போட செல்பவர்கள், வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால், 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து ஓட்டுப்போடலாம்' என, நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் லோக்சபா தேர்தல், வரும், 19ல் நடக்கிறது. ஓட்டுப்பதிவின் போது வாக்காளர்கள் அனைவரும் தங்களின் அடையாளத்தை மெய்ப்பிக்க வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை, ஓட்டுச்சாவடியில் காண்பிக்க வேண்டும். வாக்காளர் புகைப்பட அட்டையை அளிக்க முடியாத வாக்காளர்கள், தங்களின் அடையாளத்தை மெய்ப்பிக்க, 12 வகையான ஆவணங்களை காண்பித்து ஓட்டுப்போடலாம் என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன் விபரம் பின்வருமாறு:ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி மற்றும் தபால் நிலைய பாஸ் புத்தகம், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ இன்சூரன்ஸ் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ், இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு.
இந்தியன் பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய பென்சனர் சர்டிபிகேட், மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள். எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகள், இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை, வாக்காளர்கள் எடுத்துச்சென்று, ஓட்டுச்சாவடி அலுவலரிடம் காண்பித்து ஓட்டுப்போடலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

