/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிதிலமடைந்த அரசு குடியிருப்பு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை
/
சிதிலமடைந்த அரசு குடியிருப்பு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை
சிதிலமடைந்த அரசு குடியிருப்பு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை
சிதிலமடைந்த அரசு குடியிருப்பு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை
ADDED : செப் 16, 2024 02:53 AM
எருமப்பட்டி: எருமப்பட்டி டவுன் பஞ்., கை காட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு, பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு, கடந்த, 60 ஆண்டுகளுக்கு முன் மருத்துவமனையின் பின்புறம், 12 குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந்த குடியிருப்புகள், 60 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் கட்டடங்கள் சிதிலமடைந்து, மேற்கூரைகள் இடிந்து கிழே விழுந்து வருகின்றன.
மேலும், கழிவறை மற்றும் முன்பகுதி சுவர்கள் அனைத்தும் சிதிலமடைந்துள்ளதால், பலர் இங்கு குடியிருக்க முடியாமல், வாடகை வீடுகளுக்கு சென்றுவிட்டனர். மேலும், சிலர் வேறு வழியின்றி இந்த சிதிலமடைந்த குடியிருப்புகளிலேயே குழந்தைகளை வைத்துக்கொண்டு, மழைக்காலங்களில் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இதனால் இந்த பழைய கட்டடத்தை இடித்துவிட்டு புதிது கட்ட கோரிக்கை எழுந்துள்ளது.