/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வருமானம், இருப்பிட சான்று பெற 11 பள்ளியில் இ-சேவை மையம்: மாணவ, மாணவியர் பயன்
/
வருமானம், இருப்பிட சான்று பெற 11 பள்ளியில் இ-சேவை மையம்: மாணவ, மாணவியர் பயன்
வருமானம், இருப்பிட சான்று பெற 11 பள்ளியில் இ-சேவை மையம்: மாணவ, மாணவியர் பயன்
வருமானம், இருப்பிட சான்று பெற 11 பள்ளியில் இ-சேவை மையம்: மாணவ, மாணவியர் பயன்
ADDED : மே 25, 2024 02:54 AM
நாமக்கல்: வருமானம், இருப்பிடம், முதல் பட்டதாரி சான்று பெற விண்ணப்பிக்க, மாவட்டத்தில், 11 பள்ளிகளில், இ-சேவை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு, கடந்த, 6, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு, கடந்த, 10, பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு, கடந்த, 14ல் வெளியாகின. இதையடுத்து, வரும், 2024-25ம் கல்வியாண்டு விரைவில் துவங்க உள்ளதால், மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், உயர்கல்வி பயில தேவையான வருமானம், இருப்பிடம், ஜாதி, முதல்பட்டதாரி உள்ளிட்ட சான்றுகளை பெற வசதியாக, அவர்கள் படித்த பள்ளிகளிலேயே இ--சேவை மையம் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டது.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், சேந்தமங்கலம் தாலுகா, பழையபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, கோனுார் அரசு மேல்நிலைப்பள்ளி, மோகனுார் தாலுகா, என். புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி. ப.வேலுார் தாலுகா, சோழசிராமணி அரசு மேல்நிலைப்பள்ளி, ராசிபுரம் எஸ்.எஸ்., சாலை, அரசு மேல்நிலைப்பள்ளி, சிங்களாந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு தாலுகா, சித்தாளந்துார் அரசு மேல்நிலைப்பள்ளி.
குமாரபாளையம் தாலுகா, பள்ளிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, தண்ணீர்பந்தல்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, சேந்தமங்கலம் தாலுகா, காவக்காரன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி என, 11 பள்ளிகளில், இ-சேவை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையங்கள், காலை, 10:00 முதல், மதியம், 2:00 மணி வரை செயல்படும். இந்த இ-சேவை மையங்களுக்கு சென்ற பள்ளி மாணவ, மாணவியர், தங்களது இருப்பிடம், வருமானம், ஜாதி, முதல் பட்டதாரி உள்ளிட்ட சான்றிதழ்களை விண்ணப்பித்தனர்.
நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில், ஏராளமான மாணவ, மாணவியர் சான்று கேட்டு விண்ணப்பித்தனர். அவற்றை, நாமக்கல் கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரசுத்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

