/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
நீட் ரத்து இல்லை, விலக்கு தான் கேட்கிறோம் நாகையில் முத்தரசன் பேட்டி
/
நீட் ரத்து இல்லை, விலக்கு தான் கேட்கிறோம் நாகையில் முத்தரசன் பேட்டி
நீட் ரத்து இல்லை, விலக்கு தான் கேட்கிறோம் நாகையில் முத்தரசன் பேட்டி
நீட் ரத்து இல்லை, விலக்கு தான் கேட்கிறோம் நாகையில் முத்தரசன் பேட்டி
ADDED : ஏப் 10, 2025 01:06 AM
நாகப்பட்டினம:தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விதி விலக்கு தான் கேட்கிறோம், நீட் ரத்து என கேட்கவில்லை என இ.கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
நாகையில் நிருபர்களிடம் முத்தரசன் கூறியதாவது., அ.தி.மு.க ,வுக்கு விவாதிக்க பிரச்னை ஒன்றும் இல்லை. மத்திய அரசுக்கு எதிராகத் தான் தமிழகத்தில் பிரச்னைகள் உள்ளது. சட்டசபையிலும், வெளியிலும் தமிழக அரசு கொண்டு வரும் அனைத்து தீர்மானங்களையும் அ.தி.மு.க., ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கவர்னர் மீது உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு மிகுந்த வரவேற்கதக்கது.
சட்ட சபையில் அனைத்து கட்சிகளும் தீர்மானத்தை ஆதரித்து முதல்வரை பாராட்டி பேசும் போது, அ.தி.மு.க., மவுனம் சாதிக்கிறது. மத்திய அரசு தமிழகத்திற்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் போது தமிழகத்தில் உள்ள கட்சிகள் எதிர்த்து போராடும் போது அ.தி.மு.க , விழிபிதுங்கி நிற்கிறது.
இதையெல்லாம் திசை திருப்பத்தான் முயற்சி எடுக்கிறது. கேரளாவில் முல்லை பெரியாறு, கர்நாடகாவில் மேகதாது பிரச்னை தீர்ப்பேன் அப்பதான் கூட்டணி என்றால் தமிழகத்தில் எந்த கட்சியும் கூட்டணி வைக்க முடியாது. அ.தி.மு.க., பா.ஜ.,வோடு சேர்வதற்கு முயற்சி எடுக்கிறதோ இல்லையோ, பா.ஜ., முயற்சி எடுக்கிறது. அ.தி.மு.க.,வை மிரட்டி பணிய வைக்க அனைத்து முயற்சிகளையும் பா.ஜ., எடுக்கிறது. மிரட்டலுக்கு அடி பணிய வேண்டிய நிர்பந்தத்திற்கு எடப்பாடி ஆளாகியுள்ளார். நீட் தேர்வுக்கு விதி விலக்கு வேண்டும் என்றுதான் கேட்கிறோம் ரத்து என கூறவில்லை. பா.ஜ.,வின் பகை வருமோ என அ.தி.மு.க., புறக்கணிக்கிறதா எனவும் தெரியவில்லை என்றார்.

