ADDED : ஜூலை 23, 2025 12:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி; வாடிப்பட்டி பேரூராட்சி மேட்டு நீரேத்தானில் சாக்கடை வடிகாலை சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தினர்.
அப்பகுதி காளி கூறியதாவது: வசிப்பிட பகுதியில் சாக்கடை வடிகால் கட்டி பல ஆண்டுகளாகிறது. சாக்கடை வடிகால் சிறிய அளவாக இருப்பதால் கழிவுநீர் எளிதாக செல்ல முடியவில்லை. இதனால் தேங்கும் நீரால் துர்நாற்றம், கொசு தொல்லை, நோய் பரவும் அபாயம் உள்ளது.
மழைக் காலங்களில் சாக்கடை வடிகால் விரைந்து நிரம்பி மழைநீர் ரோட்டில் செல்கிறது. சில பகுதிகளில் சாக்கடையின் இரு பக்க சுவர்களும் சேதமடைந்துள்ளன. பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

