/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சலுகை கட்டணத்தில் சிறுநீரக பரிசோதனை
/
சலுகை கட்டணத்தில் சிறுநீரக பரிசோதனை
ADDED : மார் 14, 2024 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்று உலக சிறுநீரக தினத்தையொட்டி மதுரை அரசரடியில் உள்ள தேவகி சிறப்பு மருத்துவமனையில், சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.
மார்ச் 11ல் துவங்கி 20 வரை காலை 9:00 முதல் மதியம் 3:00 மணி வரை நடைபெறும் முகாமில் ரூ.2600 மதிப்பிலான பரிசோதனைகளை ரூ.299க்கு செய்யலாம். இதில் ஹீமோகுளோபின், ரத்தசர்க்கரை, முழுமையான சிறுநீர் பரிசோதனை, யூரியா, கிரியாட்டினின், சிறுநீரகம் ஸ்கிரீனிங், யூரிக் ஆசிட், மருத்துவரின் ஆலோசனை வழங்கப்படும். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள், கல்லடைப்பு, சிறுநீரக நோய் தொற்று உள்ளவர்கள், சர்க்கரை, ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம். முன்பதிவுக்கு 0452- 2288850, 90478 88421ல் தொடர்பு கொள்ளலாம்.

