/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தென்னங்கன்றுகள் உற்பத்தி மையம் துவங்க வலியுறுத்தல்
/
தென்னங்கன்றுகள் உற்பத்தி மையம் துவங்க வலியுறுத்தல்
தென்னங்கன்றுகள் உற்பத்தி மையம் துவங்க வலியுறுத்தல்
தென்னங்கன்றுகள் உற்பத்தி மையம் துவங்க வலியுறுத்தல்
ADDED : மார் 13, 2024 12:16 AM
மேலுார், - மேலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முத்துபாண்டியன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
விவசாயிகள் பேசியதாவது: உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவுபடி நீர்பிடிப்பு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். புலிப்பட்டியில் இருந்து கொட்டாம்பட்டி பகுதிக்கு புதிய கால்வாய் கட்ட வேண்டும். சிங்கம்புணரி நீட்டிப்பு கால்வாயை மராமத்து பார்க்க வேண்டும். அலங்காநல்லுார் கரும்பு ஆலையை விரைந்து துவங்க வேண்டும்.
தென்னங்கன்றுகள் உற்பத்தி மையம் துவங்க வேண்டும். மேலவளவு பகுதிகளில் கால்வாய்களை யூனியன் அதிகாரிகள் அழித்து ரோடு அமைத்துள்ளதால் கால்வாய்களை கட்டித்தர வேண்டும். பிரதமர் கிஷான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வருவது கிடையாது என்றனர்.
விவசாயிகள் பழனிச்சாமி, மணி, கிருஷ்ணன், துரைப்பாண்டி, சிதம்பரம், கதிரேசன் சாகுல்ஹமீது, பாண்டி பன்னீர்செல்வம் பங்கேற்றனர்.

