/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொழில் முனைவோருக்கான திரிவேணி எக்ஸ்போ நிறைவு
/
தொழில் முனைவோருக்கான திரிவேணி எக்ஸ்போ நிறைவு
ADDED : டிச 21, 2025 05:16 AM
மதுரை: மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில், முன்னாள் மாணவர்கள் தொழில் முனைவோர் கூட்டமைப்பு (டி.இ.என்.,), கல்லுாரியின் தொழில்நுட்ப வணிக இன்குபேட்டர் (டி.சி.இ., - டி.பி.ஐ.,) உடன் இணைந்து 'திரிவேணி எக்ஸ்போ' எனும் 2 நாள் மாநாடு நடந்தது.
பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் ஸ்ரீநாத் ரவிச்சந்திரன், லட்சுமி, பாவனா, ரகுநாதன், மதியழகன், கணேஷ் தியாகராஜன் உள்ளிட்டோர், தொழில்முனைவோராக விரும்பும் தற்போதைய மாணவர்களுடன் அனுபவங்களை பகிர்ந்ததோடு, ஆலோசனை, உத்திகளை வழங்கினர்.
நேற்று கல்லுாரிமுதல்வர் அசோக்குமார் தலைமையில் நடந்த நிறைவு விழாவில், சென்னை கிஸ்புளோ நிறுவனர் சுரேஷ் சம்பந்தம் பேசினார். அனிகட் கேபிட்டல் நிர்வாக பங்குதாரர் பாலமுருகன், செடாஸ் இன்பர்மேஷன் டெக்னாலஜி நிறுவனர் முரளி ஆவணிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
'திரிவேணி எக்ஸ்போ'வில் தினமலர் நாளிதழின் தாமரை பிரதர்ஸ் மீடியா சார்பில் ஸ்டால் உட்பட முன்னாள் மாணவர்கள், தங்கள் நிறுவன தயாரிப்புகளை 68 ஸ்டால்களில் காட்சிப்படுத்தினர். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கார்த்திகேயன், டி.பி.ஐ., சி.இ.ஓ., வினோத் ராஜேந்திரன், தொழில் கல்வி நிறுவன தொடர்பு டீன் ஹரிஹரன் செய்திருந்தனர்.

