ADDED : ஜன 19, 2026 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: யானைமலை கிரீன் பவுண்டேஷனின் மரக்கன்றுகள் நடும் விழா ஒத்தக்கடை மேலுார் மெயின் ரோடு அருகில் நடந்தது.
எல்.கே.பி., நகர் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். வன்னி மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்றுகளுக்கு பராமரிப்பு பணி, களப்பணி செய்யப்பட்டன. 'மரம் வளர்ப்போம்' என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர்கள் ராகேஷ், பிரபு, பாலமுருகன், உறுப்பினர்கள் செல்வி, பிரேம், விக்னேஸ்வரி, ஆசிரியர் கார்த்திக், பாலா மணி பங்கேற்றனர். ரூபன் நன்றி கூறினார்.

