/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காற்றாலை லாரியால் போக்குவரத்து பாதிப்பு
/
காற்றாலை லாரியால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஆக 24, 2025 04:07 AM

வாடிப்பட்டி: நாமக்கல்லில் இருந்து துாத்துக்குடிக்கு காற்றாலைக்கான இறக்கையை ஏற்றிக்கொண்டு நேற்று காலை ராட்சத லாரி சென்றது. வாடிப்பட்டி அருகே திண்டுக்கல் நான்கு வழிச்சாலை தனிச்சியம் 'ப்ளை ஓவர்' பாலத்தில் இறங்கி லாரி மதுரை நோக்கி சென்றது. அப்போது லாரியின் பின்பக்க டயர்கள் கட்டுப்பாட்டை இழந்து நான்கு வழிச்சாலை 'சென்ட்ர் மீடியன்' மீது ஏறியதால் லாரி குறுக்காக நின்றது. 'கிரேன்கள்' மூலம் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின் லாரி மீட்கப்பட்டது.
இதனால் மதுரை - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதித்தது. சமயநல்லுார் போக்குவரத்து போலீசார், தேசிய நெடுஞ்சாலை துறை மீட்பு குழுவினர் வாகன போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.