/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோரிப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம்
/
கோரிப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம்
ADDED : டிச 30, 2025 07:43 AM
மதுரை: மதுரை கோரிப்பாளையம் அருகே புதிய மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடப்பதை முன்னிட்டு, தமுக்கம் சந்திப்பில் இருந்து கோரிப்பாளையம் சந்திப்புக்கு செல்லும் வழித்தடத்தில் வலது பக்க சாலை மூடப்பட்டு, தற்போது இடது பக்க சாலை மட்டும் பயன்பாட்டில் இருக்கிறது.
இதில் தற்போது அமெரிக்கன் கல்லுாரி நுழைவு வாயில் சாலை சந்திப்பில் இருந்து , கோரிப்பாளையம் சந்திப்பு வரை உள்ள பில்லரில் கிரேன் மூலம் பீம் அமைக்கும் பணி நடக்க உள்ளது.
எனவே டிச.10 முதல் தமுக்கம் சந்திப்பில் இருந்து கோரிப்பாளையம் செல்லும் வாகனங்கள், அமெரிக்கன் கல்லுாரி நுழைவு வாயில் சாலை சந்திப்பில் இருந்து வலதுபுறம் திரும்பி ஜிடெக்ஸ் டெய்லர் கடை அருகில் மூடப்பட்டு இருந்த இடது பக்கசாலை வழியாக கோரிப்பாளையம் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

