/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிவகங்கை ரிங் ரோடு முதல் மேலமடை சிக்னல் வரை போக்குவரத்துக்கு தடை இன்று சோதனை; நவ.26 முதல் அமல்

ADDED : நவ 24, 2024 04:25 AM
மதுரை : மேம்பாலப் பணிக்காக சிவகங்கை ரிங் ரோடு முதல் மேலமடை சிக்னல் வரை நவ.26 முதல் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. இன்று (நவ.24) சோதனை முறையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
கோமதிபுரம் 6வது தெரு வழியாக வண்டியூர் மக்கள் மற்றும் அப்பகுதியினர் கார்கள், ஆட்டோ, டூவீலரில் செல்லலாம். அதேசமயம் 6வது தெரு முதல் மேலமடை சிக்னல் வரை செல்லக்கூடாது.
மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் இருந்து வரும் வாகனங்கள் மேலமடை, சுகுணா ஸ்டோர், தெப்பக்குளம், விரகனுார் வைகை சர்வீஸ் ரோடு வழியாக செல்ல வேண்டும்.
சிவகங்கை ரிங் ரோட்டில் இருந்து மேலமடை நோக்கி வரும் வாகனங்கள் மாட்டுத்தாவணி அல்லது விரகனுார் ரிங் ரோடு வழியாக நகருக்குள் செல்ல வேண்டும்.
ஆவின் சந்திப்பில் இருந்து மேலமடை சிக்னல் வரை வரும் வாகனங்கள், இடது புறம் திரும்பி மாட்டுத்தாவணி வழியாகவும், வலதுபுறம் திரும்பி தெப்பக்குளம் வழியாகவும் செல்ல வேண்டும்.