sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 இன்றைய நிகழ்ச்சி : மதுரை

/

 இன்றைய நிகழ்ச்சி : மதுரை

 இன்றைய நிகழ்ச்சி : மதுரை

 இன்றைய நிகழ்ச்சி : மதுரை


ADDED : ஜன 26, 2026 05:32 AM

Google News

ADDED : ஜன 26, 2026 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் * தெப்ப உற்ஸவம் 6ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன், சுவாமி தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகள் வழியாக எழுந்தருளுதல், காலை 9:00 மணி, வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மனும், தங்க ரிஷப வாகனத்தில் சுவாமியும் சித்திரை வீதிகளில் எழுந்தருளுதல், இரவு 7:00 மணி.

* தைப்பூசத் திருவிழா: சோலைமலை கோயில், அழகர்கோவில், யாக சாலை பூஜைகள், காலை 8:30 மணி, உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம், காலை 10:30 மணி, சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடு, மதியம் 12:30 மணி, ஆடுக்கிடா வாகன உலா, மாலை 6:00 மணி.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மாலை 7:30 மணி.

பக்தி சொற்பொழிவு * திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி மதுரை, மாலை 6:30 மணி.

* சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

* லட்சார்ச்சனை: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசி வீதி, மதுரை, காலை 8:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத். சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* சொற்பொழிவு: திருவள்ளுவர் மன்றம், சக்தி வேலம்மாள் நகர், மதுரை, தலைமை: இணைச் செயலர் அக்கையாசாமி, பாட்டுக்கொரு புலவன்- பாட்டுக்கு இன்னுமொடு பாவேந்தன், சொற்பொழிவு: செந்தமிழ் கல்லுாரி முன்னாள் முதல்வர் சின்னப்பா, மாலை 4:30 மணி.

குடியரசு தின நிகழ்வுகள் * ஆயுதப்படை மைதானம், மதுரை, கொடியேற்றுபவர்: கலெக்டர் பிரவீன்குமார், முன்னிலை: எஸ்.பி., அரவிந்தன், ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், காலை 8:05 மணி.

* ரத்த தான முகாம்: தியாகராஜ் மேல்நிலை பள்ளி, வசந்த் நகர், மதுரை, ரத்தம் சேகரிப்பவர்கள்: அரசு ராஜாஜி மருத்துவமனை ரத்த வங்கி, ஏற்பாடு: ஜீவநதி அறக்கட்டளை, காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை.

* அகவிழி பார்வையற்றோர் விடுதி, மூனுார் பொய்கைக்கரைப்பட்டி, மதுரை, கொடியேற்றி சிறப்புரை: மாவட்ட நீதிபதி ராஜசேகரன், தலைமை: பாரா சாப்ட்வேர் நிறுவன தொழிலதிபர் ராஜ்குமார், முன்னிலை, கவிஞர் ரவி, காலை 9:00 மணி.

* தமிழ் இசைச் சங்கம், மதுரை, தலைமை: அறங்காவலர் கிருஷ்ணன், முன்னிலை: ராமசாமி, கொடியேற்றுபவர்: அறங்காவலர் மோகனகாந்தி, பங்கேற்பு: ராணி லேடி மெய்யம்மை ஆச்சி தமிழ் இசைக் கல்லுாரி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள், காலை 10:30 மணி.

* சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ், காமராஜர் ரோடு, மதுரை, கொடியேற்றுபவர்: தலைவர் தினேஷ், சிறப்பு விருந்தினர்: விஞ்ஞானி (டி.ஆர்.டி.ஓ.) ஜனார்தனன், காலை 8:30 மணி.

* மனோகரா நடுநிலைப்பள்ளி, செல்லுார், மதுரை, தலைமை: சண்முகசுந்தரம், கொடியேற்றுபவர்: மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், முன்னிலை: மாமன்ற உறுப்பினர்கள் குமரவேல், திலகர், ஏற்பாடு: குறிஞ்சி மலர் அரிமா சங்கம், காலை 7:35 மணி.

* கால்நடைத்தீவன உற்பத்தி, விற்பனையாளர்கள் சங்கம், கீழமாசி வீதி மதுரை, கொடியேற்றுபவர்: தலைவர் கந்தசாமி, காலை 11:00 மணி.

*திருநகர் அண்ணா பூங்கா சங்கமம், இயற்கை அங்காடி அருகில், தலைமை: திருநகர் மக்கள் மன்ற துணை தலைவர் பொன் மனோகரன், கொடியேற்றுபவர்: ஓய்வு தலைமையாசிரியர் பிச்சுமணி, ஏற்பாடு: திருநகர் மக்கள் மன்றம், காலை 8:00 மணி.

* மதுரை ரயில்வே காலனி செம்மண் திடல், கொடியேற்றுபவர்: கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா, பாதுகாப்பு படை வீரர்கள், மாணவ, மாணவிகள் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சி, மோப்ப நாய்களின் சாகசம், காலை 9:00 மணி.

* எம்.எல். டபிள்யு.ஏ., மேல்நிலைப் பள்ளி, மணிநகரம், மதுரை, கொடியேற்றுபவர்: வழக்கறிஞர் கிருபாகர், முன்னிலை: செயலர் நாகசுப்ரமணியன், காலை 9:00 மணி.

* கலைஞர் தமிழ் இலக்கியத்திறனாய்வு மன்றம், பி.கே.எம். நகர், வண்டியூர், மதுரை, கொடியேற்றுபவர்: தலைவர் ஐசுஅரிராம், காலை 7:00 மணி.

* மீனாட்சிபுரம் முதல் தெரு, கொடியேற்றுபவர்: தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராம கிருஷ்ணன், சிறப்பு விருந்தினர்கள்: சப்-இன்ஸ்பெக்டர் தனபாக்கிய லட்சுமி, மீனாட்சிபுரம் நலச்சங்க தலைவர் ராமலிங்கம், துணை தலைவர் கணேசன், ஏற்பாடு: மீனாட்சிபுரம் நலச்சங்கத்தினர், காலை 9:30 மணி.

* சிறப்பு பட்டிமன்றம்: விக்டோரியா எட்வர்டு மன்றம், மேல வெளி வீதி, மதுரை, தலைமை: தனி அலுவலர் விஜயசாந்தி, ஏற்பாடு: மக்கள் சிந்தனை பேரவை மாவட்ட கிளை, பட்டிமன்ற தலைப்பு 'இன்றைய இளைஞர்களின் போக்கு மகிழ்ச்சி தருகிறதா? மனக்கவலை தருகிறதா?', நடுவர்: சாலமன் பாப்பையா, மாலை 5:30 மணி.

* எஸ்.ஏ.சி.எஸ்., எம்.ஏ.வி.எம்.எம்., பொறியியற் கல்லுாரி, அழகர்கோயில், கொடியேற்றுபவர்: லயன்ஸ் சங்க மண்டல தலைவர் சிவகுமார், முன்னிலை: எம்.ஏ.வி.எம்.எம்., சபைத் தலைவர் பாஸ்கரன், காலை 9:30 மணி.

* வெற்றிலை பாக்கு பீடி சிகரெட் வர்த்தக சங்கம், மஞ்சணக்கார முத்தையா பிள்ளைத் தெரு, மதுரை, கொடியேற்றுபவர்: சங்கத் தலைவர் திருப்பதி, காலை 8:00 மணி.

* சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி, காமராஜர் ரோடு, மதுரை, கொடியேற்றுபவர்: ஓய்வு பேராசிரியர் சுப்புராமன், முன்னிலை: தலைமை ஆசிரியர் ஜோதிகுமார், காலை 9:30 மணி.

* பாரதி மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நலச்சங்கம், ஹரிகிருஷ்ணா தெரு, குலமங்கலம் மெயின்ரோடு, செல்லுார், மதுரை, தலைமை: இயன்முறை மருத்துவர் வைபவி வைஷாலி, காலை 7:00 மணி.

* உயர்நீதி மன்ற மதுரை கிளை, உத்தங்குடி, மதுரை, கொடியேற்றுபவர்: நீதிபதி ஜெயச்சந்திரன், காலை 10:15 மணி.

* மாநகராட்சி அலுவலகம், கொடியேற்றுபவர்: துணை மேயர் நாகராஜன், முன்னிலை: கமிஷனர் சித்ரா விஜயன், ஏற்பாடு: மாநகராட்சி நிர்வாகம், காலை 8:10 மணி.

* அல் அமீன் மேல்நிலைப்பள்ளி, கோ.புதுார், கொடியேற்றுவோர்: தேசிய நெடுஞ்சாலைத்துறை முன்னாள் நிர்வாக அலுவலர் மீரா மோகன்ராம், முன்னாள் மாணவர் மகேஷ்வரன், முன்னிலை: தலைமை ஆசிரியர் ஷேக் நபி, காலை 8:30 மணி.

* ஜான்சிராணி பூங்கா, மதுரை, கொடியேற்றுபவர்: ராஜ்குமார், தலைமை: ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன், ஏற்பாடு: நேதாஜி தேசிய இயக்கம், நேதாஜி சிலை பாதுகாப்பு, பராமரிப்பு இயக்கம், காலை 8:00 மணி.

* காந்தி மியூசியம், மதுரை, தேசியக்கொடி ஏற்றுபவர்: வழக்கறிஞர் செந்தில்குமார், தலைமை: செயலாளர் நந்தா ராவ், காலை 9:30 மணி.

பொது * வானமாமலை ஜீயர் சுவாமிகள் மதுரை வருகை 2ம் நாள் : பிராமண கல்யாண மண்டபம், எஸ்.எஸ். காலனி, மதுரை, திருவடி சம்பந்தம் பாராயணம், காலை 9:00 மணி, திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலுக்கு சுவாமிகள் செல்லுதல், ஏற்பாடு: வரவேற்பு கமிட்டி தலைவர் ராமகிருஷ்ணன், மாலை 5:00 மணி.

* 19வது ஆண்டு நிறைவு- பட்டய நாள்:, அருணாசலம் கமலாம்பாள் ஹால், காமராஜர் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: திண்டுக்கல் மண்டல ஓய்வுபெற்ற வன அலுவலர் ராஜ்குமார், கவுரவ விருந்தினர்: இந்தியம் ஏரோஸ்பேஸ், ரோபோட்டிக்ஸ் நிறுவனர் சதீஸ் வெங்கடாசலபதி, ஏற்பாடு: சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ், மாலை 6:00 மணி.

பள்ளி, கல்லுாரி * வெள்ளி விழா கொண்டாட்டம்: லட்சுமி பள்ளி, தலைமை: குமரகுரு இன்ஸ்டிடியூட் தலைவர் சங்கர் வானவராயர், கவுரவ விருந்தினர்கள்: பெற்றோர் மணிமேகலை, முன்னாள் மாணவி, வின்ட் பியோனர்-வணிக தலைவர் லலிதா பிரியதர்ஷினி, ஏற்பாடு: பள்ளி நிர்வாகம், மாலை 5:00 மணி.

* என்.எஸ்.எஸ்., முகாம்: தேனுார், தலைமை: சுந்தரராஜப் பெருமாள் கோவில் தக்கார் நெடுஞ்செழியப்பாண்டியன், செந்தமிழ்க் கல்லூரி ஆங்கிலத் துறைத்தலைவர் வேணுகா, ஏற்பாடு: செந்தமிழ்க் கல்லுாரி என்.எஸ்.எஸ்., பிரிவு, 'மாசில்லா பாரதத்தை உருவாக்குவோம்' மரக்கன்று நடும் விழா, காலை 8:30 மணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் முன்னிலையில் போக்சோ விழிப்புணர்வு, மதியம் 12:00 மணி.

மருத்துவம் * பொது மருத்துவ முகாம்: வடமலையான் மருத்துவமனை, சொக்கிக்குளம், மதுரை, காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.

கண்காட்சி * கைத்தறி, நாட்டு ஆடைகளுக்கான கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us