கோயில் தெப்ப உற்ஸவம் 3ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன், சுவாமி தங்கச்சப்பரத்தில் சித்திரை வீதிகளில் எழுந்தருளுதல், காலை 9:00 மணி, மண்டபத்தில் இருந்து காமதேனு வாகனத்தில் அம்மனும், கைலாசபர்வத வாகனத்தில் சுவாமியும் சித்திரை வீதிகளில் எழுந்தருளுதல், இரவு 7:00 மணி.
தைப்பூசத் திருவிழா -- கொடியேற்றம்: சோலைமலை முருகன் கோயில், அழகர்கோவில், காலை 10:00 மணி முதல் 10:15 மணிக்குள், சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடு, காலை 10:30 மணி, பூத வாகனத்தில் புறப்பாடு, மாலை 6:30 மணி. கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா தொடங்குவதை குறிக்கும் வகையில் ஆயிரம் பொன்சப்பரம் முகூர்த்தம்: பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, மதியம் 1:30 முதல் 2:15 மணிக்குள்.
தை 2ம் வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு ராஜ அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, விளாங்குடி, மதுரை, இரவு 7:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி.
பக்தி சொற்பொழிவு லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசி வீதி, மதுரை, மாலை 5:00 மணி.
தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - வாசிநாதம் சுவாமிகள், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை.
பொது விவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் பிரவீன்குமார், காலை 10:00 மணி முதல்.
சோலார் விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஓட்டல் தமிழ்நாடு, அழகர்கோவில் ரோடு, மதுரை, தலைமை: மகளிர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் நிறுவனர் பாக்கியலட்சுமி, சிறப்பு விருந்தினர்கள்: தமிழ்நாடு மின் பகிர்மான கழக பொறியாளர்கள் ரெஜினா ராஜகுமாரி, பாலபரமேஸ்வரி, காலை 10:00 மணி.
நேதாஜி பிறந்த நாள் சிறப்பு சர்வ சமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், செனாய் நகர், மதுரை, தலைமை: செப்சிரா செயலாளர் மோகன், சிறப்புரை: சமூக செயல்பாட்டாளர் விவேகானந்தன், ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம் (செப்சிரா), மாலை 6:00 மணி.
நேதாஜி பிறந்த நாள் விழா: நேதாஜி சிலை வளாகம், ஜான்சிராணி பூங்கா, மதுரை, தலைமை: நேதாஜி தேசிய இயக்க ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன், சிறப்புரை: சவுராஷ்டிரா வர்த்தக சபை தலைவர் தினேஷ், ஏற்பாடு: நேதாஜி தேசிய இயக்கம், நேதாஜி சிலை பாதுகாப்பு- பராமரிப்பு குழு, காலை 8:00 மணி.
சவுராஷ்ட்ரீ யுவபாரதி சான்றிதழ் வகுப்பு தொடக்க விழா: மே பிளவர் அரங்கம், காமராஜர் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: என்.எம்.ஆர். சுப்பராமன் பெண்கள் கல்லுாரி தலைவர் ஜவஹர் பாபு, ஏற்பாடு: சவுராஷ்டிரா சமூக நலப் பேரவை, ஸ்ரீமந் நாயகி வித்யா மந்திர் பள்ளி, மாலை 5:30 மணி.
தமிழ்நாட்டு அகழாய்வுகளில் அண்மைக்கால அறிவியல் ஆய்வுகள் - பன்னாட்டு கருத்தரங்கம்: கோர்ட்யார்ட் மேரியட் ஓட்டல், மதுரை, ஏற்பாடு: தொல்லியல் துறை, காலை 10:00 மணி முதல்.
பள்ளி, கல்லுாரி என்.எஸ்.எஸ்., முகாம் தொடக்கம்: தேனுார், தலைமை: நான்காம் தமிழ்ச்சங்கம் செயலாளர் மாரியப்பமுரளி, தொடங்கி வைப்பவர்: முன்னாள் பேராசிரியர் சதாசிவம், ஏற்பாடு: செந்தமிழ்க் கல்லுாரி என்.எஸ்.எஸ்., பிரிவு, மாலை 6:30 மணி.
14வது ஆண்டு விழா: பிரான்ஷ்வா மெய்யர் மெட்ரிக் பள்ளி, பாய்ஸ் டவுன் சொசைட்டி, ஆலம்பட்டி, சிறப்பு விருந்தினர்: தியரி மெய்யர், பீட்ரைஸ் மெய்யர் (பெல்ஜியம்), மாலை 5:30 மணி.
சிங்கப்பூர் சிறிய தீவு பெரிய வளர்ச்சி - சொற்பொழிவு: உலகத் தமிழ்ச்சங்கம், மதுரை, சிறப்புரை: சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் முன்னாள் தலைவர் ஆண்டியப்பன், ஏற்பாடு: உலக தமிழ்ச் சங்கம், மதுரை காந்தி என்.எம். ஆர்., சுப்பராமன் பெண்கள் கல்லுாரி, காலை 11:00 மணி, ஆண்டியப்பன் எழுதிய வாமனத்தீவு நுால் வெளியீடு, காலை 11:00 மணி.
ஒரு நாள் கருத்தரங்கம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராம சுப்பையா, ஏற்பாடு: தமிழ் உயராய்வு மையம், காலை 9:00 மணி.
மருத்துவம் பொது மருத்துவ முகாம்: வடமலையான் மருத்துவமனை, சொக்கிக்குளம், மதுரை, காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.
கண்காட்சி கைத்தறி, நாட்டு ஆடைகளுக்கான கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை.
மேட் இன் மதுரை கண்காட்சி: மடீட்சியா ஹால், மதுரை, ஏற்பாடு: மடீட்சியா, பங்கேற்பு: தலைவர் செந்திகுமார், செயலாளர் அசோக், கண்காட்சி தலைவர் ஷியாம் நாராயண், சிறப்பு விருந்தினர்கள்: மாநகராட்சி கமிஷனர் சித்ரா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கணேசன், காலை 11:00 மணி, கண்காட்சி நேரம் காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, சுற்றுலாத் திறன்கள் கருத்தரங்கு, மாலை 4:00 மணி.

