/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் ஆசிரியர்கள் அவதி
/
தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் ஆசிரியர்கள் அவதி
தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் ஆசிரியர்கள் அவதி
தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் ஆசிரியர்கள் அவதி
ADDED : செப் 07, 2025 10:52 AM
பேரையூர்: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாமல் ஆசிரியர்கள் பலர் அவதியில் உள்ளனர்.
ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு எழுத விருப்பம் இல்லாதவர்கள் உடனடியாக வேலையை ராஜினாமா செய்யலாம். அவர்கள் ஓய்வு பெறும் போது கிடைக்கும் சலுகைகளை இப்போது பெற்றுக்கொண்டு கட்டாய ஓய்வுக்கு எழுதிக் கொடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆக.,11 அன்று தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பை வெளியிட்டது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி செப்., 8, தேர்வு நவ., 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
ஆக.,11 முதல் பட்டய படிப்பு முடித்தவர்கள் பேப்பர் 1 க்கும் பிஎட்., முடித்தவர்கள் பேப்பர் 2க்கும் விண்ணப்பித்து வருகின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் பலர் விண்ணப்பித்து வருகின்றனர். 1988 ஆம் ஆண்டு வரை பட்டய படிப்பு படிப்பதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி தகுதியாக இருந்தது. அவ்வாறு பட்டய படிப்பு முடித்து ஆசிரியராக பலர் பணிபுரிந்து வருகின்றனர்.
ஆன்லைனில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றும் பட்டய படிப்பு சான்றிதழை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால் 1988 வரை படித்த இவர்களிடம் பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழ் இல்லை. இதனால் இவர்களால் விண்ணப்பிக்க முடியாமல் அவதியில் உள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் இவர்கள் விண்ணப்பிக்க ஆன்லைனில் வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.