/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஊழல் செய்வதில் முதலிடத்தில் தமிழகம் அ.தி.மு.க., மருத்துவரணி இணைச் செயலாளர் சரவணன் குற்றச்சாட்டு
/
ஊழல் செய்வதில் முதலிடத்தில் தமிழகம் அ.தி.மு.க., மருத்துவரணி இணைச் செயலாளர் சரவணன் குற்றச்சாட்டு
ஊழல் செய்வதில் முதலிடத்தில் தமிழகம் அ.தி.மு.க., மருத்துவரணி இணைச் செயலாளர் சரவணன் குற்றச்சாட்டு
ஊழல் செய்வதில் முதலிடத்தில் தமிழகம் அ.தி.மு.க., மருத்துவரணி இணைச் செயலாளர் சரவணன் குற்றச்சாட்டு
ADDED : டிச 22, 2025 05:34 AM
மதுரை: ''ஊழல் செய்வதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையில் ரூ. 4.60 லட்சம் கடன் சுமையை வைத்தது தான் தி.மு.க.,வின் சாதனை'' என அ.தி.மு.க., மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் குற்றம் சாட்டினார்.
மதுரையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் அவர் கூறியதாவது: சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி செயல்படுகிறார். கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்ல முதன் முதலில் நிதியுதவியை ஜெயலலிதா வழங்கினார். அதை உயர்த்தியவர் பழனிசாமி. அ.தி.மு.க., ஆட்சியில் அன்னை தெரசா பெயரில் பல்கலை அமைக்கப்பட்டது. சர்ச்சுகளை சீரமைக்க நிதி வழங்கப்பட்டது. ஆனால் சிறுபான்மையினரை ஓட்டுக்காக மட்டுமே தி.மு.க., பயன்படுத்துகிறது.
நாட்டிலேயே ஊழல் அதிகம் நடைபெறும் மாநிலமாக தமிழகம் உள்ளதாக முன்னாள் நீதிபதி மார்க்கண்டே கட்ஜூ கூறியுள்ளார். ஏற்கனவே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க., தான். மத்திய அரசில் அங்கம் வகித்த போது ரூ. 2,500 கோடி சேது சமுத்திர திட்ட ஊழல், ரூ. 1.75 லட்சம் கோடி 2 ஜி ஊழல் என உலகையே திரும்பி பார்க்க வைத்தது.
இன்று ஊழல் செய்வதில் கருணாநிதியை ஸ்டாலின் மிஞ்சி விட்டார். கனிம வளத்துறையில் 22.70 லட்சம் யூனிட் மணல் திருட்டு, பத்திரப் பதிவு அலுவலகங்களில் ஒவ்வொரு பதிவுக்கும் 10 சதவீத கமிஷன், சென்னையில் மழை வடிகால் பணி, திருவண்ணாமலை பாலப் பணி என அனைத்து துறைகளிலும் ஊழல் தலை விரித்தாடுகிறது. இந்நிலையில் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்வதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.
தி.மு.க., ஆட்சியமைத்த நான்கரை ஆண்டுகளில் இதுவரை ரூ.5 லட்சம் கோடி கடன் பெறப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ. 4.60 லட்சம் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. 54 துறைகளில் தி.மு.க., அரசு செய்த ஊழல் பணத்தில் தமிழகத்தின் ஒட்டுமொத்த கடனை அடைத்து விடலாம். வரும் சட்டசபை தேர்தலில் ஊழல் ஆட்சியை மக்கள் அகற்றுவர். இவ்வாறு கூறினார்.

