/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கல்புளிச்சான்பட்டியில் தண்ணீரின்றி தவிப்பு
/
கல்புளிச்சான்பட்டியில் தண்ணீரின்றி தவிப்பு
ADDED : அக் 02, 2024 07:08 AM

விக்கிரமங்கலம் : செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் ஊராட்சி கல்புளிச்சான்பட்டியில் குடிநீர், தண்ணீர் வசதியின்றி கிராமத்தினர் சிரமப்படுகின்றனர்.
இக்கிராமத்தில் மேல்நிலை தொட்டியில் இருந்து தெற்கு தெரு பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு உப்புநீர் விநியோகிக்கப்பட்டது. ஊராட்சி நிர்வாகம் ஜல்ஜீவன் திட்ட குழாய்கள் மூலம் காலை, மாலை வழங்கிய நீர் மேடான பகுதியுள்ள சில பகுதிகளுக்குச் செல்வதில்லை. நான்கு தெருக்களுக்கு 6 மாதமாக உப்புத்தண்ணீர் கூட வழங்க வில்லை. செல்லமணி கூறுகையில், ''எங்கள் பகுதியில் குடிநீர் குழாய் வசதி இல்லை. ஒரு குடம் ரூ.10க்கு வாங்கலாம் என்றாலும் குடிநீர் வாகனங்கள் எப்போதாவதுதான் வருகிறது. கால்நடைகளை பராமரிக்க முடியவில்லை என்றார்.
ஊராட்சித் தலைவர் கலியுகநாதன் கூறுகையில், ''ஜல்ஜீவன் திட்ட குழாய்கள் பழுதாகியும், சேதப்படுத்தப்பட்டும் உள்ளன. தெருவுக்கு ஒரு குடிநீர் குழாய் விரைவில் அமைத்து தரப்படும்'' என்றார்.

