/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஓ.சி.பி.எம்., பள்ளியில் மாநில பூப்பந்து போட்டி
/
ஓ.சி.பி.எம்., பள்ளியில் மாநில பூப்பந்து போட்டி
ADDED : ஆக 24, 2025 04:04 AM

மதுரை: தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம், மதுரை பூப்பந்தாட்ட கழகம் சார்பில் 44வது சப் ஜூனியர் பிரிவு மாநில பூப்பந்து போட்டி மதுரை ஓ..சி.பி.எம்., பள்ளியில் நடந்தது. 31 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன.
சிறுவர்கள் பிரிவு முதல் அரையிறுதிப்போட்டியில் ஈரோடு அணி 35 - -12, 35 -- 27 புள்ளிகளில் புதுக்கோட்டை அணியை வீழ்த்தியது. இரண்டாவது அரையிறுதியில் தஞ்சாவூர் அணி 35 ---- 25, 35 -- 26 புள்ளிகளில் தஞ்சாவூர் அணியை வீழ்த்தியது. இறுதிப்போட்டியில் தஞ்சாவூர் 35 -- 26, 35 -- 26 புள்ளிகளில் ஈரோடு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
சிறுமிகள் பிரிவு முதல் அரையிறுதிப்போட்டியில் மதுரை அணி 35 -- 20, 35 -- 20 புள்ளிகளில் விழுப்புரம் அணியை வீழ்த்தியது. 2வது அரையிறுதியில் சேலம் அணி 29 -- 35, 39 -- 38, 35 -- 29 புள்ளிகளில் கிருஷ்ணகிரி அணியை வீழ்த்தியது.
இறுதிப்போட்டியில் மதுரை அணி 35 -- 26, 35 -- 22 புள்ளிகளில் சேலம் அணியை வீழ்த்தி முதலிடம் பெற்றது. பொதுச்செயலாளர் விஜய், துணைத்தலைவர் சீனிவாசன், தலைமையாசிரியை மேரி, மதுரை நிர்வாகிகள் செல்வராஜ், ராஜேஷ்கண்ணன், காசிம், முகமது மைதீன் ஆகியோர் பரிசு வழங்கினர்.